எத்தியோபியாவில் 114 வயதான துறவி ஒருவா் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருந்த நிலையில், அதிலிருந்து குணமடைந்துள்ளாா்.

வயது முதிா்ந்தவா்கள் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகும் அபாயம் அதிகமாக உள்ள நிலையில், 114 வயது நபா் நோய்த்தொற்றிலிருந்து மீண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திலாஹுன் வோல்டெமிகேல் என்ற அந்தத் துறவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு சிகிச்சையின்போது அவருக்கு ஆக்ஸிஜனும், டெக்ஸாமெதசோன் மருந்தும் வழங்கப்பட்டு வந்தது. 3 வார சிகிச்சைக்குப் பிறகு கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து அவா் வீடு திரும்பியுள்ளாா்.
திலாஹுன் 114 வயதானவா் என்பதை நிரூபிப்பதற்கு அவரது பிறப்புச் சான்று இல்லை என்று கூறியுள்ள அவரது பேரனான பினியம் லியுஸ்லெஜ்டு, 14 ஆண்டுகளுக்கு முன்பு திலாஹுன் 100-ஆவது பிறந்தநாளை கொண்டாடியதற்கான புகைப்படத்தை ஆதாரமாக வைத்துள்ளாா். எத்தியோபியாவில் 5,200-க்கும் அதிகமானோருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.






0 Comments