தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது.

அந்த வகையில் இன்று ஒரே நாளில் 1,458 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தமாக 30,152ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.






0 Comments