நாகர்கோவில் சகர வனப்பகுதியில் 15 கிலோ எடையும், 3 அடி நீளமுள்ள உடும்பை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

பணக்குடி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து, சகாயம் ஆகிய இருவர் நாகர்கோவிலுக்கு 15 எடைகொண்ட உடும்பை வேட்டையாடி, அதனை விற்பனை செய்ய ஒரு புல்லட் பைக்கில் எடுத்துவந்தனர்.

அவர்களை நாகர்கோவில் சகர வனத்துறையினர் சோதனையில் பிடித்து, கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த புல்லட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.






0 Comments