தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 18-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று 798 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18325 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் 1,243 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையில் கொரோனா வைரஸால் மொத்த பாதிப்பு 24,545ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியே பதிவாகி வருவது கலக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,685 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் மொத்தமாக 34,914 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.