ஓடிசா விமான பயிற்சியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 20 வயதான சகோதரி அனீஸ் பாத்திமா பரிதாபமாக உயிரிழந்தார்.
சமுதாயத்தில் கல்வி என்பது எட்டாக் கனியாக தான் உள்ளது. அதிலும் பெண்களுக்கான கல்வி என்பது காணல் நீர்தான். இப்போது தான் சமூகம் தட்டுத் தடுமாறி முன்னேறும்போது இதுபோன்ற சோக நிகழ்வுகள் அமைவது மனதிற்கு பெரும் வேதனையாக உள்ளது.

எதிர்காலத்தில் விமான ஓட்டியாக மிளிர்ந்து, நாட்டுக்கும் அவர் வீட்டுக்கும் இந்த சமுதாயத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டிய தமிழகத்தை சார்ந்த 20 வயதான சகோதரி அனீஸ் பாத்திமா.. ஓடிசா விமான பயிற்சியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில் சற்றுமுன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இறைவன் அவரது குடும்பத்தாருக்கு மன அமைதியை தருவானாக!