கொரோனா பாதிப்பு இந்தியா முழுவதும் அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தினமும் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கிறது. கொரோனா பரிசோதனைக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் என்று தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொடுக்க வேண்டியது இருக்கிறது. எனவே இதற்கு அரசு ஒரு உத்தரவை போட்டு, கொரொனா பரிசோதனையை ரூ.500-க்குள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் பெற்று களியக்காவிளை சோதனைச்சாவடிக்கு இரவு நேரத்தில் வந்தால், பரிசோதனைக்கு காலதாமதம் ஆவதால் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே காலதாமதம் இல்லாமல் கொரோனா பரிசோதனை செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுவாக தமிழக அரசு 5 அடி, 6 அடி சந்துகளில் அதிக மக்கள் வாழ்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி செலவு செய்ய இருக்கிறார். அந்த பணத்தில் தமிழக அரசுக்கு உரிய பாக்கித்தொகை முழுவதும் கொடுக்கப்பட வேண்டும். பாதாள சாக்கடைத்திட்டப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். தக்கலை பகுதியில் மத்திய அரசு சார்பில் ஒரு பாலம் அமைப்பதற்கு ஆய்வுப்பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. தக்கலையில் இருந்து 1½ கி.மீ. தொலைவில் பைபாஸ் சாலை வருகிறது. அது திறக்கப்பட்டால் தக்கலையில் போக்குவரத்து நெருக்கடி இருக்காது. எனவே இந்த பாலப்பணியை நிறுத்த வேண்டும்.
மத்திய அரசு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை நிறுத்திவிட்டது. எனவே வேலைகளை உடனடியாக தொடங்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மின்சார கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் மத்தியில் இருந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே மின்சார கட்டணத்தை 4 மாதங்களுக்கு கணக்கிடுவதற்கு பதிலாக 2 மாதங்களுக்கு கணக்கிட்டு, அதில் இலவச மின்சாரத்தை கழித்து கட்டணத்தை கணக்கிட வேண்டும். அப்படி செய்தால் மக்களுக்கு சிரமம் இருக்காது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியதைப்போல், கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500-ஐ நிவாரணமாக மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.






0 Comments