தக்கலை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சிறுவர் சிறுமியர் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கி டிஎஸ்பி ராமச்சந்திரன் முக கவசம் வழங்கினார்.
கடந்த 12 வார காலமாக கொரோனா வைரஸ் மக்களை பாடாய் படுத்தி வருகிறது. மத்திய மாநில அரசின் ஊரடங்கு உத்தரவை மக்கள் விழிப்புடன் ஏற்றுக்கொண்டதால் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால் அனைத்து தரப்பு மக்களும் வேலை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்தனர். ஊரடங்கு தளர்வுக்கு பின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் பெருகி வருகிறது. நேற்றைய நிலவரப்படி 122 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று உள்ளனர். இதில் பலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஆனால் நாள்தோறும் வைரஸ் தொற்றிய எகிறிக்கொண்டே போகிறது.

இந்நிலையில் மாவட்ட எஸ் பி ஸ்ரீநாத் ஆலோசனைப்படி குமரி மாவட்ட காவல்துறையினர் சமூக இடைவெளியுடன் வாழ்வது, முக கவசம் அணிவது குறித்து பாதசாரிகள் பொதுமக்களுக்கு ஆங்காங்கே அறிவுரை வழங்கி முக கவசத்தை இலவசமாக வழங்கினர். தக்கலை சரக டி எஸ் பி ராமசந்திரன் வழிகாட்டுதலில் மார்த்தாண்டம், கொற்றிகோடு, களியக்கவிளை, அருமனை, ஆறுகாணி உள்பட அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் டிரைவர்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கு கொரோனா தோற்று குறித்து அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது .தக்கலை சரக டிஎஸ்பி ராமச்சந்திரன் தக்கலைஆட்டோ டிரைவர்களுக்கு சமூக இடைவெளியுடன் ஆட்டோவில் பயணிப்பது, முக கவசம் அணிவது நன்மை குறித்து பேசி இலவசமாக கவசங்களை வழங்கினார்.

இதுபோன்று தக்கலை காமராஜ் பேருந்து நிலையம் முன் நின்று அவ்வழியாக சென்ற பஸ் பயணிகள், சிறுவர் சிறுமியர்களுக்கு அறிவுரை கூறி முககவசங்களை வழங்கினார். மேலும் பல சிறுவர் சிறுமிகளுக்கு முக கவசம் அணிவித்து அசத்தினார் .டிஎஸ்பியின் களப்பணியை பாதசாரிகள், பஸ் பயணிகள் பாராட்டினர்.