கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவரது மகள் வீணா விஜயன். தகவல் தொழில் நுட்ப நிபுணரான இவர் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகி விட்டது.
இந்நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் முகமது ரியாசுக்கும் பினராயி விஜயன் மகள் வீணாவுக்கும் திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முடிவு செய்தனர்.

கொரோனா பிரச்சினையால் இவர்களது திருமணம் தள்ளிபோனது. இந்த நிலையில் வருகிற 15-ம் தேதி இவர்களின் திருமணம் நடக்க இருக்கிறது.