ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து சமுதாய மக்களின் நலன்களிலும் அக்கறை கொண்டு சிறப்பாக செயல்படும் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் அதிரடி பணிகளின் தொடர்ச்சியாக இன்று சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதி அருகில் வைத்து மாற்று மத சகோதரர்களுக்கு உலகை அச்சுறுத்தும் கொரோனோ தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொரோனோ தடுப்பு ஹோமியோபதிமருந்து மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் இப்ரஹிம் கான், தலைவர் மீரான் மைதீன், பொதுச் செயலாளர் ஹிமாம் பாதுஷா ,ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது
பொருளாளர் நசீர் உசைன் துணைப் செயலாளர் ஆக்டிவிடீஸ் எஸ்.ஆர்.ஹாஜிபாபு, மாவட்ட இஸ்லாமிய வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அப்துல் வாஹித், நாகர்கோவில் நகர தலைவர் ஜாஹிர் ஹுசைன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொரோனோ தடுப்பு ஹோமியோபதி மருந்தினை குறித்து மாஞ்சாங் குடியிருப்பு ஹோமியோபதி சித்தா ஆயுர்வேத மருத்துவமனை டாக்டர் பிரேம்குமார் விளக்கம் அளித்தார்.
சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் பதி குரு பாலஜனாதிபதி அவர்கள் கொரோனோ தடுப்பு மருந்தினை அனைவருக்கும் வழங்கி துவக்கி வைத்தார். சிவந்தி ஆதித்தனார் கல்லூரி மற்றும் விவேகானந்தர் கல்லூரி தாளாளர் C.ராஜன் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
மாநகர தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் எஸ்.அயூப் கான், மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் முஹம்மது அஸ்கர், முகமது சாதிக் , நாகர்கோவில் மாநகர துணைச் செயலாளர் சேக் செய்யது அலி, கோட்டை அடி கிளை தலைவர் ரஹீப் பாதுஷா, உறுப்பினர் ரைசுத்தீன், மற்றும் மனநல ஆலோசகர் டாக்டர் ராஜன், நாடார் பேரவை கொள்கை பரப்புச் செயலாளர் எஸ் சுபாஷ், அய்யா வைகுண்டர் அறக்கட்டளை தலைவர் பூபதி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்






0 Comments