காங்கிரஸ் இயக்கத்தின் குமரி மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவரும் தகவல் தொழில் நுட்ப ஊடக பிரிவு செயலாளருமான தக்கலை அப்துல் வாஹித் அவர்கள் இன்று (01-06-2020) மரணமடைந்தார்.
குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்காக நாளெல்லாம் ஓய்வில்லாமல் உழைத்தவராவார்.. ஊரடங்கால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் போன்றோர் படும் இன்னல்களை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட தலைமைக்கு அனுப்பிய தலை சிறந்தவர் புத்துணர்ச்சியானவர்.

மத்திய அரசு மக்கள் மீது கொண்டு வந்த குடியுறிமை திருத்த சட்டத்தை கட்சி துணையோடு போராட்டம் கண்டு எதிர்த்தவர். அவரின் இறப்பு குமரி மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்திற்கு பேரிழப்பாகும்.