கொரொனா பாதிப்புக்கு இடையில், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று லாகூரில் இருந்து தனிவிமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. 20 வீரர்களும், தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக், மருத்துவ அதிகாரி உள்பட 11 பேரும் சமூக இடைவெளியுடன் விமானத்தில் அமர்ந்து பயணித்தனர்.

முதற்கட்ட சோதனையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 10 வீரர்கள் கழற்றி விடப்பட்டனர். பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அந்த நடைமுறை முடிந்ததும் ஜூலை 13-ம் தேதியில் இருந்து பயிற்சியை தொடங்குவார்கள். ரசிகர்கள் இன்றி நடக்க உள்ள இந்த போட்டித் தொடருக்கான அட்டவணை அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.






0 Comments