உண்ணாமலைகடை பேரூராட்சிக்கு உட்பட்ட கொல்லன்விளையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த மக்கள் கண்ணன்விளாகத்திற்கு செல்ல சாலை வசதி வேண்டும் என வசந்தகுமார் எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து வசந்தகுமார் எம்.பி. தனது சொந்த செலவில் வாங்கிய பொக்லைன் எந்திரம் மூலம் கொல்லன்விளை, கண்ணன்விளாகம் இணைப்பு சாலையை சீரமைக்கும் பணியை நேற்று தொடங்கி வைத்தார். இதில் ரத்னகுமார், ஜான் தினேஷ், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.