சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தண்டனைக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது.
கொரோனா நோய் தொற்று பிரச்சனையால் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அனைத்து மாநில சிறைத்துறைகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.

சசிகலாவும் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என அவரது தரப்பினர் கூறி வருகின்றனர். தண்டனை காலம் ஜூலையில் முடிவடைவதால், சசிகலாவையும் முன்கூட்டியே விடுதலை செய்ய சிறைத்துறை பரிந்துரைத்துள்ளது.

கர்நாடகா உள்துறையின் ஒப்புதல் கிடைத்ததும், விடுதலை செய்யப்படுவார் என அவர்கள் தெரிவிக்கின்றனர். நன்னடத்தை கைதிகளுக்கு மட்டுமே முன்கூட்டியே விடுதலை செய்யும் சலுகை கிடைக்கும். சசிகலா சிறையில் இருந்தபோது ஷாப்பிங் சென்ற பிரச்சினையால் இந்த சலுகை கிடைக்காது என்றும் சிலர் தரப்பில் கூறப்படுகிறது.

எனினும், சசிகலா ரிலீஸ் குறித்து கர்நாடகா சிறைத்துறை தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.