மார்த்தாண்டம் மீன் மார்க்கெட்டில் ரோட்டோரம் வாகனங்களை நிறுத்தி மீன் ஏற்றுவதால் மாலை வேளையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மார்த்தாண்டம் - கருங்கல் ரோட்டில் பஸ் ஸ்டாண்டை ஒட்டி காய்கறி மார்க்கெட் மற்றும் மீன் மார்க்கெட் உள்ளது. கொரோனா தாக்கத்தை தொடர்ந்து லாரிபேட்டை தற்போது மீன் மார்க்கெட்டாக செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி, ராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதிகளில் இருந்து மீன் மார்க்கெட்டிற்கு மீன்லோடு கொண்டு வரப்படுகிறது. அங்கு இறக்கப்படும் மீன்களை மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீன் வியாபாரிகள் வந்து மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இதற்காக 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மார்க்கெட் ரோட்டின் இருபுறமும் நிறுத்தி விடப்படுகின்றன.
வெளியிடங்களில் இருந்து மீன்லோடு வந்ததும் அங்கிருந்து மீனை இறக்கி சில்லறை வியாபாரிகளின் வாகனங்களில் ஏற்றுவதற்காக சுமைதூக்கும் தொழிலாளிகளும், வியாபாரிகளும் கொண்டு செல்கின்றனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாக மாறிவிட்டது. அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும் போக்குவரத்தை முறைபடுத்தாததால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.
சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் மாலை நேரத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






0 Comments