நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணிகள் நடப்பதால் போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது. நாகர்கோவில் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த பாதாள சாக்கடை பணிகளை தொடர்ந்து வடசேரி மணிமேடை சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. இதனால் வடசேரி வழியாக அண்ணா பஸ் ஸ்டாண்டு செல்லும் பஸ்கள் மாற்றுபாதை வழியாக இயக்கப்பட்டு வருகிறது. கார், ஆட்டோ, லாரிகள், கனரக வாகனங்களும் மாற்று பாதையில் இயக்கப்படுகிறது. பைக்குகள் மட்டும் வருவதால் நெருக்கடியாக இருந்து வருகிறது.






0 Comments