மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
ஓட்டுநர் உரிமம், பிட்னெஸ் சான்றிதழ், அனைத்து வகையான பெர்மிட்டுகள் , பதிவு அல்லது வேறு ஏதேனும் சம்பந்தப்பட்ட ஆவணம் போன்ற மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் தேதியை இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி வரை நீட்டிப்பதாக கூறியுள்ளார்.

அதன்படி சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் , அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. காலாவதியான ஓட்டுநர் உரிமங்கள் அல்லது பிற போக்குவரத்து ஆவணங்களின் செல்லுபடியை மத்திய அரசு நீட்டிப்பது இது மூன்றாவது இரண்டாவது முறையாகும்.

முன்னதாக, 2020 ம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி அனைத்து மாநிலங்களுக்கும் , யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பிப்ரவரி 1 க்கு பிறகு காலாவதியாகும் அனைத்து ஆவணங்களையும் மே 31 வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதையடுத்து மே 24 அன்று வெளியிட்ட அறிவிப்பில் ஜூலை 31 வரை நீட்டித்திருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 30 ம் தேதி வரை நீட்டித்துள்ளது.