கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்தி வரும் விசாரணை மற்றும் கோர்ட்டு நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாத்தான்குளம் வந்தால், அவரிடம் வியாபாரிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக இச்சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுப்பதும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, குடும்பத்துக்கு ரூ.10 கோடி நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.
இவ்வாறு வசந்தகுமார் எம்.பி கூறினார்.






0 Comments