கோவை தெற்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த இரு நாட்களுக்கு மேலாக தினமும் கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், தி.மு.க., அ.தி.மு.க.,வை சேர்ந்த தலா 4 எம்.எல்.ஏ.,க்கள் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் குடும்பத்தினர் கடந்த வாரம் மதுரை சென்று வந்தனர். இதனையடுத்து அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 3 நாட்களுக்கு பின்னர் அம்மன் அர்ஜூனனுக்கும் பரிசோதனை நடந்தது. அதில், அவருக்கும் கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அர்ஜூனன், மனைவிக்கு கொரோனா உறுதியாகவில்லை.