கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயமானார்.
கோவளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி (63). இவர் புதன்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு சக மீனவர்களோடு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றார். கடற்கரையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவுக்குள் வள்ளம் சென்றபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கடல் அலையில் சிக்கி வள்ளம் தலைகீழாக கவிழ்ந்து. இதில் அந்தோணி கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் அந்தோணியை காப்பாற்ற முயற்ச்சித்தும் இயலவில்லை.

இச்சம்பவம் குறித்து மீனவர்கள் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மீனவரை மீட்கும் பணியில் கடலோர காவல் குழும காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.