கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஜமாஅத்தின் முக்கிய நிர்வாகிகளையும் மாவட்டம் முழுவதும் நிர்வாகிகளாக தேர்ந்தெடுத்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று மணலிக்கரை முஸ்லிம் ஜமாஅத் தலைவரும், முன்னாள் தலைவரும் முக்கிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் ஆலோசனைக்குழு நிர்வாகியாக மணலிக்கரை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் எம்.பி. ஆசாத் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் அரிமா சங்கத்தின் முக்கிய பல பொறுப்புகளிலும், ஸ்காட் கிறிஸ்டியன் காலேஜ் அலுமினி அசோசியேஷன் துணைத் தலைவராகவும், கன்னியாகுமரி டிஸ்ட்ரிக்ட் ரெட் கிராஸ் சொசைட்டி உடைய வாழ்நாள் உறுப்பினராகவும் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் கல்விக் குழு துணை தலைவராக மணலிக்கரை முஸ்லிம் ஜமாஅத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான சகோதரர் எம்.மீரான் மைதீன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.