கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் நாகர்கோவில் மாநகர நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சியும் ஆலோசனைக் கூட்டமும் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகரத் தலைவர் ஜாஹிர் உசேன் தலைமை தாங்கினார்.
மாவட்ட நிர்வாகிகள் நிறுவனத் தலைவர் இப்ராஹிம் கான் தலைவர் மீரான் மைதீன் பொதுச் செயலாளர் ஹிமாம் பாதுஷா, பொருளாளர் நசீர் உசைன், ஆக்டிவிடீஸ் துணைச்செயலாளர் ஹாஜி பாபு, மாவட்ட துணைத்தலைவர்கள் பீர்முகமது, சாகுல் அமீது என்ற மிடாலம் சலாம், மாவட்ட துணை செயலாளர் சம்சுதீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகர்கோவில் மாநகர நிர்வாகிகளாக கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநகர தலைவராக N.ஜாகிர் உசேன், துணைத் தலைவர்களாக M.முகமது அலி, M.முஹம்மது ஹைதர், இன்ஜினியர் சேக் J முஹம்மது, Z.ஜெகபர் சாதிக், P.முகமது உசேன், மாநகரச் செயலாளர் ஆக M.ஷேக் முஹம்மது, துணைச் செயலாளராக இன்ஜினியர் எம் ஷேக் முஹம்மது, N.இக்பால், ஹபீப் ரஹ்மான் H. பஸுலுல் கரீம், K.சேக் செய்யது அலி, பொருளாளர் M.S.முகம்மது யூசுப் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
நிகழ்ச்சியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பதிமூன்று மாநகர நிர்வாகிகளுக்கும் சான்றிதழ், அடையாள அட்டை, கொடுத்து பொன்னாடை போர்த்தி மாவட்ட நிர்வாகிகள் மாநகர நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகம் பல தீர்மானங்களை நிறைவேற்றியது.
அதில் குறிப்பாக வெகுவிரைவில் நாகர்கோவில் மாநகரம் சார்பாக புது அலுவலகம் திறப்பது.
மாவட்ட நிர்வாகம் நாகர்கோவிலில் புதிதாக துவங்க முயற்சிக்கும் டயாலிசிஸ் சென்டர், இரத்த வங்கி, போன்ற பணிகளுக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பது.
மாநகர புது நிர்வாகிகள் முழுமூச்சாக ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் பணியாற்றி மாநகரத்தின் நிர்வாக தொடர் அணிகளான அனைத்து நிர்வாகிகளுடன் மாநகர நிர்வாகிகளும் ஒன்றிணைந்து மாநகரத்தில் உள்ள அனைத்து மக்களின் நன்மைக்காக வேண்டி உரிமைக்காக வேண்டியும் உழைப்பது இதுபோன்ற பல முக்கியமான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது
நிகழ்ச்சியின் இறுதியில் பொருளாளர் முகமது யூசுப் நன்றி கூறினார்






0 Comments