மா.கம்யூ நாகர்கோவில் நகர குழு சார்பில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெயர் மாற்றம் மற்றும் நம்பர் மாற்றங்கள் நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சிபிசிஐடி விசாரணைக்கு உட்பட்டு இருக்கின்ற காசி, டிராவிட் என்பவரின் வாகனத்தை எடுத்து சென்று அவருடைய பெயருக்கு பெயர் மாற்றம் செய்துள்ளார்.

இது போன்று வாகன அபகடத்தில் உருக்குலைந்த வண்டிகள் நம்பர்களை வேறு வாகனத்திற்கு மாற்றம் செய்வது போன்ற சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து பணங்களை கைப்பற்றுவதும் தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சம்மந்தபட்ட அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.