கொரோனா வைரஸ் பரிசோதனை யில் தனக்கு கொரோனா உள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சமூக ஊடகங்களில் சனிக்கிழமை அறிவித்தார். தனக்கு சில நாட்களாக அறிகுறிகள் இருந்ததாக கூறி உள்ளார்.

தன்னுடன் தொடர்பு கொண்ட தனது சக ஊழியர்கள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு சவுகான் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டரில்.
"என் அன்பான நாட்டு மக்களே, எனக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன, எனது சோதனை அறிக்கைகள் வந்துள்ளன. எனது சக ஊழியர்கள் அனைவரிடமும், என்னுடன் யார் தொடர்பு கொண்டாலும், அவர்களின் கொரோனா வைரஸ் சோதனைகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது நெருங்கிய தொடர்புகள் தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டும், ”என்று கூறி உள்ளார்.
மத்திய பிரதேச முதல்வர் தான் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றி வருவதாகவும், மருத்துவரின் ஆலோசனையின்படி தனிமைப்படுத்தலுக்கு உட்படுவதாகவும், அதே நேரத்தில் தனது மாநிலத்தில் உள்ள அனைத்து குடிமக்களிடமும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.






0 Comments