கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு மாவட்டம் முழுவதும் உள்ள ஆலிம்களின் நலனை கருத்தில் கொண்டு கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு ஆலிம் கவுன்சில் உருவாக்கப்பட்டு பொறுப்பாளர்களையும் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்து வருகிறது. 
ஆலிம்களின் நலனுக்காக வேண்டி கீழ்க்கண்ட திட்டங்களை ஆலிம் கவுன்சில் மூலம் நிறைவேற்ற பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள ஆலிம்கள் முஅத்தீன்கள் அனைவருடைய மாதாந்திர ஊதியத்தை இன்றைய காலகட்டத்தில் கடுமையான விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு அனைத்து ஜமாஅத்துகளும் ஆலிம்களுக்கு ரூபாய் 20,000 வரை ஊதியமும், முஅத்தீன்களுக்கு ரூபாய்15,000 வரை ஊதியமாய் வழங்க வேண்டும் என குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாஅத்துகளையும் கேட்டுக்கொள்வது... 

மாவட்டத்திலுள்ள ஜமாஅத்களில் ஆலிம்கள் முஅத்தீன்களுக்கு மாத ஊதியம் அதிகமாக வழங்க ஜமாஅத்கள் தங்களிடம் பொருளாதார வசதி இல்லையென்றால் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லீம் ஜமாஅத் கூட்டமைப்பை அந்த ஜமாத்து உடனே தொடர்பு கொண்டால் அந்த ஜமாஅத்துக்கு வேண்டிய பொருளாதார ஏற்பாடுகளை உடனே கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துகொடுக்கும் இன்ஷா அல்லாஹ்... 

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆலிம்களுக்கும் முஅத்தீன்களுக்கும் 60 வயதுக்கு மேல் பணி ஓய்வு பெற்ற ஆலிம்களுக்கு மாத ஓய்வூதியமாக அவர்களுடைய சொந்த ஜமாஅத்துகளின் அல்லது பணிபுரிந்த ஜமாஅத் துகளின் பரிந்துரை கடிதத்துடன் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பை தொடர்பு கொண்டால் அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரூபாய் 1000 ஓய்வூதியமாக மாதம்தோறும் வழங்கப்படும்.

மாவட்டம் முழுவதும் உள்ள ஆலிம்கள் முஅத்தீன்களின் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் ஆலிம் கவுன்சிலை நாடினால் திருமண உதவி வழங்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

ஆலிம்கள் முஅத்தின்களில் யாரேனும் நிரந்தரமாக மருந்துகள் எடுக்கும் நிலையில் நோய்வாய்ப்பட்டுள்ளவர்களாயின் அவர்களின் மருந்து மாத்திரைகள் செலவை கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளும் இன்ஷா அல்லாஹ்.

மாவட்டம் முழுவதும் உள்ள ஆலிம்கள் முஅத்தீன்களின் குழந்தைகளின் கல்விச் செலவை தேவைப்படுவோர் ஜமாஅத் கூட்டமைப்பின் ஆலிம் கவுன்சிலை நாடினால் கல்விக்கான உதவித்தொகை மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு வழங்கும் இன்ஷா அல்லாஹ்.

வருடம் தோறும் ஆலிம்களுக்கு ஆலிம் கவுன்சில் மூலம் பெருநாள் புத்தாடை மற்றும் நோன்பு சக்காத் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம்ஜமாஅத் கூட்டமைப்பு வருடம் தோறும் வழங்கும் இன்ஷா அல்லாஹ்.

ஆலிம்கள் முஅத்தீன்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வண்ணம் அவர்களுடைய வீட்டார்கள் கைத்தொழில் செய்ய விருப்பப்பட்டால் அதற்க்கான உதவிகளை உபகரணங்களை கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு ஆலிம் கவுன்சில் மூலம் வழங்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

ஆலிம்கள் முஅத்தீன்களுக்கு அரசிடமிருந்து கிடைக்கவேண்டிய அனைத்து சலுகைகளையும் விரைந்து கிடைத்திட கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு ஆலிம் கவுன்சில் முன் நின்று செய்து கொடுக்கும் இன்ஷா அல்லாஹ்.. இதுபோன்ற இன்னும் பல எண்ணற்ற நல்ல திட்டங்கள் மூலம் ஆலிம்கள் முஅத்தீன்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த திட்டம் தீட்டி உள்ளோம் இவை அனைத்தும் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் ஆலிம் கவுன்சில் மூலம் நிறைவேற்றப்படும் இன்ஷா அல்லாஹ்..

மேலே கூறிய திட்டங்கள் அனைத்தும் பெற கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் ஆலிம் கவுன்சில் உறுப்பினராக இணைந்து இருக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு ஆலிம் கவுன்சிலில் உறுப்பினராக இணைய விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு மாவட்ட பொருளாளர் நசீர் உசேன் அவர்களுடன் மனுஅளிக்கவும் 7010610580 மேற்கண்ட தகவலை கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு ,மற்றும் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் ஆலிம் கவுன்ஸில் நிர்வாக கமிட்டி வெளியிட்டது..