நாகர்கோவில் கோர்ட் ரோட்டில் உள்ள எஸ்பிஐ வங்கியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் 1800 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் கோர்ட் ரோட்டில் உள்ள எஸ்பிஐ வங்கியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவுப்படி மாநகர் நல அலுவலர் கின்சால் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர்.






0 Comments