பயணிகள் சமூக இடைவெளியுடன் பஸ்சில் பயணம் செய்திருந்தால் பேருந்துகள் தொடர்ந்து ஓடியிருக்கும் என பொதுமக்கள் தரப்பில் பேசப்படுகிறது.

ஊரடங்கு தளர்வுக்குப்பின் டாஸ்மாக், மளிகைக்கடைகள், ஹோட்டல்கள், தனியார் ஆஸ்பத்திரிகள், விவசாயம் , கட்டிட தொழில்கள் செயல்பட துவங்கியது. தமிழக அரசு குறைந்த அளவு பேருந்துகளை இயக்க முடிவு செய்து உத்தரவிட்டது. ஒரு பேருந்தில் சுமார் 30 பயணிகள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பயணிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சில வழித்தடங்களில் பஸ்கள் இரவில் பயணிகள் இன்றி செல்கின்றன.
பல வழித்தடங்களில் அதிக மக்கள் பயணிக்கின்றனர். முகக் கவசம் அணியாமல் சமூக இடைவெளியின்றி செல்வது மிகுந்த வருத்தத்தை உருவாக்கியுள்ளது. பஸ் பயணிகளின் இந்தப் போக்கை கண்டக்டர்கள் கேட்டதால் வாக்குவாதங்கள் நடந்தன. வாழ வழியின்றி தவித்தபடி வேதனையுடன் செல்லும் பயணிகள் ஏதாவது வார்த்தைகளை விட்டால் அது போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தும் என நடத்துனர் அஞ்சி பயணிகளிடம் அதிகமாக கேட்பதில்லை.
ஆகவே அரசு நிர்ணயித்துள்ள பயணிகள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சென்றிருந்தால் பஸ்கள் தொடர்ந்து ஓடி இருக்கும். இதனால் தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள் கவலையின்றி சென்று வந்திருப்பார்கள். ஆனால் பயணிகளின் கவனக்குறைவால் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து இருப்பதாலும் அரசு இன்று முதல் 15 நாட்கள் போக்குவரத்து வசதியை நிறுத்தியுள்ளது.
பஸ்கள் ஓடும் போது பயணிகள் சமூக இடைவெளியுடன் பயணித்திருந்தால் இந்த நிலை தொடர்ந்து இருக்காது என பொதுமக்கள் தரப்பில் பேசப்படுகிறது. இன்று முதல் பஸ்கள் தொடர்ந்து 15 நாட்கள் ஓடாத நிலையில் திரளான மக்கள் வாழ்வாதாரத்திற்காக ஏங்கி நிற்பது காலத்தின் கட்டாயமாகும்.






0 Comments