தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. களத்தில் நின்று பணியாற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்களை தொடர்ந்து கொரோனா பதம் பார்த்து வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளில் அமைச்சர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உள்ளனர். இதனால் அமைச்சர்களும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், நாகர்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சுரேஷ்ராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என இதுவரை 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.