குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் அதிகாரிகளும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டர் மற்றும் ஊழியர்கள் 3 பேர் பாதிப்புக்கு ஆளானார்கள்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வருகிறவர்கள் கூட்டமாக வரக்கூடாது, மனுக்களை கலெக்டர் அலுவலக வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டுவிட்டுச் செல்ல வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று முதல் கலெக்டர் அலுவலகத்துக்குள் வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் ஊழியர் ஒருவர் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த பரிசோதனையில் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்டவர்களை அலுவலகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.