இந்தியாவின் கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தானாக முன்வந்துள்ளார்கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்க உலகில் பல்வேறு நாடுகளும் முயன்று வருகின்றன. 
இந்தியாவில் பாரத் பயோ டெக் நிறுவனமும், இந்திய மருந்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசி, 'கோவாக்சின்' என்ற மருந்தினை கண்டுபிடித்துள்ளனர். இதை தற்போது மனிதர்களிடையே சோதித்து பார்க்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சிரஞ்ஜித் திபார் என்ற 30 வயது இளைஞர் இம்மருந்தின் மனித பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள, தானாக முன் வந்துள்ளார். இவர் ஆசிரியராக பணிபுரிகிறார். ஆர். எஸ்.எஸ். இயக்கத்திலும் சேர்ந்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள சிரஞ்ஜித் தயாராக உள்ளார். இவர் கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் முதல் மனிதராக உள்ளார்.இவருக்கு பாட்னாவில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மையத்திலிருந்து வந்த அழைப்பை அடுத்து மருத்துவ பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இவருக்கு பரிசோதனை ஒடிசாவில் நடக்கும் என தெரிகிறது. இவர் ஏற்கனவே மருந்து பரிசோதனைக்கு தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விண்ணப்பித்திருந்தார்.

ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் ஈடுபாடுள்ள இவர் மருத்துவ பரிசோதனைக்காக தன் உடலை நாட்டிற்காகவும், மாநிலத்திற்காகவும் அர்பணிப்பதாக தெரிவித்தார்.கோவாக்சின் மருந்து குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குனர் பல்ராம் பர்கயா தெரிவித்ததாவது, ' இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் இந்த கொரோனா தடுப்பூசி மருந்தினை ஆகஸ்ட் 15 க்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டம் உள்ளது. ஆனால் பரிசோதனை மையங்களின் ஒத்துழைப்பை கொண்டு முடிந்த வரை விரைவில் இம்மருந்து மக்களின் பயன்பாட்டிற்கு வரும்.

'இது இந்தியாவிலேயே தயாராகும் முதல் கொரோனா தடுப்பூசி மருந்தாகும். நாட்டின் உயர்மட்ட அளவிலான அமைப்புகளின் கண்காணிப்பில் இந்த மருந்து உற்பத்தி செய்யப்பட உள்ளது. மேலும் புனேயில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோடக் இண்டெர்நேஷனல் நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது' இவ்வாறு தெரிவித்தார்இது குறித்து இந்திய மருந்து கட்பாட்டாளர் கூறியதாவது, ' கடந்த ஞாயிறன்று இந்தியாவில் இரு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு மனிதப் பரிசோதனை செய்ய அரசு அனுமதி வழங்கியது.

தற்போது இந்தியா கொரோனா பாதிப்பை பொறுத்தவரை மூன்றாம் இடத்திற்கு முன்னேறி விட்டது.கடந்த 24 மணிநேரத்தில் 24,800க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுவரை 7.7 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 21,279 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மத்திய அரசு கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வலியுறுத்தி வருகிறது. கொரோனாவுக்கான உடனடி சிகிச்சைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால், தற்போது வரை கொரோனா தொற்று சமூகபரவல் ஆகவில்லை என்று மத்திய அரசு கூறுகிறது' இவ்வாறு அவர் தெரிவித்தார்.