தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே காமராஜர் நகரை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அபிஷேக் (15). கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக அபிஷேக் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வந்தார். இவருக்கு ஆன்லைனில் பாடங்கள் புரியவில்லை என்று தெரிகிறது.
இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்து வருத்தப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அபிஷேக், நேற்று முன்தினம் இரவு பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். பெற்றோர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.






0 Comments