74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார், மேலும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

நாட்டின் 74 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது, அதன் படி கன்னியாகுமரி மாவட்டத்திலும் 74 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது,
நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற 74 ஆவது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார், மேலும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய 359 முன்கள பணியாளர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார். மேலும் 2 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில் பொதுமக்கள் இன்றியும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இன்றியும் 74 ஆவது சுதந்திர தின விழா எளிமையாக நடைபெற்றது.






0 Comments