ஆந்திராவின் சித்தூர் அருகே ஹட்சன் பால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் 14 பேர் அடுத்தடுத்து மயக்கம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் பந்தபள்ளியில் ஹட்சன் பால் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வியாழக்கிழமை மாலை திடீரென 14 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து அனைவரும் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் ஊழியர்கள் மயக்கம் அடைந்தது தெரியவந்தது.