கொரோனாவால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் தன்னுடைய தொகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டது. சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






0 Comments