கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் அமைப்பின் பொருளாளர் சகோதரர் நசீர் உசேன்.

கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு பொறுப்பாளர்களில் ஒரே நேரத்தில் நான்கு பொறுப்புகளை எடுத்து அந்த நான்கு பொறுப்புகளையும் இன்றளவும் இந்த மாவட்டமே பாராட்டும் அளவிற்கு சிறப்போடு செயல்படும் அன்பு சகோதரர் இவர்,
கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் பொருளாளர்,
கூட்டமைப்பின் உதவும் கரங்கள் கமிட்டி உறுப்பினர், கூட்டமைப்பின் நிக்காஹ் டாட் காம் ஒருங்கிணைப்பாளர், கூட்டமைப்பின் மாவட்ட இரத்த தான குழு ஒருங்கிணைப்பாளர் என ஒரே நேரத்தில் 4 பொறுப்புகளில் திரன் பட செயல்படும் சிறப்பாளர்.
கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் ரத்ததான குழுவினால் தினம்தோறும் நான்கு ஐந்து நபர்களுக்கு இரத்த தானம் வழங்கி பிறர் உயிர் காப்பதில் மும்முரமாக செயல்படும் இவர். இரு தினங்களுக்கு முன்பு கொரோனோ தொற்றின் காரணமாக உயிருக்கு போராடிய சகோதரர் ஒருவருக்கு பிளாஸ்மா உடனே பெற்றுக் கொடுத்தார்.
நேற்றைய தினம் இரவு ஒன்பது மணிக்கு திங்கள் சந்தையை சார்ந்த சகோதரர் பி பாசிடிவ் பிளட் வேண்டும் என்று கேட்டு உடனே பத்தாவது நிமிடத்தில் ரத்ததான கொடையாளர்கள் அனுப்பி வைத்து அங்கு சென்றதும் பி பாசிடிவ் அல்ல ஓ பாசிட்டிவ் என்றதும் உடனே ஓ பாசிட்டிவ் நபர்களை உடனே அனுப்பி வைத்து ஒன்பது மணிக்கு ரத்தம் தேவை என்ற சகோதரருக்கு அவருக்கு இரண்டு யூனிட் இரத்தம் தேவைப்பட்டது தேவைபட்டவர் அதிசயிக்கும் வண்ணம் 9. 45 மணிக்குள் ஐந்து நபர்கள் ரத்தம் தானம் வழங்க சம்பவ இடத்திற்கு சென்று விட்டார்கள் இதுபோன்ற துடிப்பான சமுதாய பணிகளில் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தன் முழு நேரத்தையும் ஒதுக்கி செயல்படும் அன்பு சகோதரர் நசீர் உசேன் அவர்களின் சமுதாய பணியை வார்த்தைகளால் பாராட்ட முடியாது.
குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் நசீர் உசேன் அவர்களின் சமூக பணியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.






0 Comments