தற்போது பரவிவரும் கொரோனா நோயை பயன்படுத்தி கும்பல் ஒன்று கிட்னியை திருடி சம்பாதித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதசே மாநிலம் வாரணாசியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் விபத்தால் காயமடைந்த இளைஞர் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதலில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பாசிட்டிவ் என வந்ததால், கொரோனா சிகிச்சை பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் அந்த இளைஞர் மருத்துமனையில் காணவில்லை என்பதால் பரபரப்பு நிலவியது. அனைவரும் இந்த இளைஞரை தேடித் தொடங்கினர்.
காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படத்தை அடுத்து வழக்குப்பதிவு செய்து அவர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த இளைஞர் மருத்துமனை அருகே சாக்கடையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரின் உடலைக் கைப்பற்றிய உறவினர்கள், அதனை போலீஸிடம் ஒப்படைத்தனர். மேலும் தங்கள் மகனின் கிட்னியை மருத்துமனை நிர்வாகம் திருடிவிட்டதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிட்னி திருட்டு புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






0 Comments