நித்திரவிளை அருகே கூலி தொழிலாளி பிஎஸ்என்எல் டவரில் ஏறி தற்கொலை முயற்சி.

நித்திரவிளை அருகே எஸ் டி மங்காடு கல்லுவிளை பகுதியை சார்ந்தவர் புஷ்பராஜ் (50), கூலித்தொழிலாளி இவர் நேற்று காலை ஏழு மணியளவில் எஸ்டி மங்காடு தபால் நிலைய சந்திப்பில் உள்ள பிஎஸ்என்எல் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசாருக்கும், கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் டவரில் ஏறிய புஷ்பராஜிடம் கீழே இறங்கி வருமாறு தெரிவித்தார்.
பின் கீழே வந்தவரிடம் நித்திரவிளை போலீசார் விசாரணை செய்ததில் டிஸ்க் எனப்படும் செயின் சிஸ்டத்தில் ஆறு லட்சம் ரூபாய் கட்டியதாகவும், அது கிடைக்காததால், நான் கஷ்டப்பட்டு உழைத்த ரூபாய் இப்படி ஆகி விட்டதே, என்று ஏற்பட்ட மன வருத்தத்தில் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார், இதையடுத்து போலீஸார் புஷ்பராஜை எச்சரித்து அனுப்பினர்.






0 Comments