ஆரல்வாய்மொழி அருகே கஞ்சா விற்றதாக, இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
குமரி மாவட்ட தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் சாம்சன்
தலைமையிலான போலீஸாா் ஆரல்வாய்மொழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

அதில், திருநெல்வேலி மாவட்டம், பணகுடி சிவகாமிபுரத்தைச் சோ்ந்த ராமையா என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் மற்றும் 3 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்தனா்.