முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கோமா நிலையில் உள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, 10ம் தேதி, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டில்லியில் உள்ள, ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், முகர்ஜியின் மூளையில், கடுமையான ரத்தக்கட்டு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
உடனடியாக அறுவை சிகிச்சை மூலம், ரத்தக்கட்டு நீக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள, பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை, கவலைக்கிடமாக இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து, நேற்று காலை வதந்தி பரவியது. இதையடுத்து 'பிரணாப் முகர்ஜி நலமுடன் இருக்கிறார்.
வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்' என, அவரது மகனும், காங்., முன்னாள் எம்.பி.,யுமான அபிஜித் முகர்ஜி தெரிவித்தார். 'பிரணாப் உடல்நிலை சீராக இருந்தாலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ள அவர், கோமா நிலையில் உள்ளார்' என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.






0 Comments