வியாபாரத்தில் ஏற்பட்ட பகை மற்றும் நஷ்டம் காரணமாக பிசினஸ் பார்ட்னர் மற்றும் அவரது குடும்பத்தினரை நண்பரே காருடன் வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வேணுகோபால் ரெட்டி, கங்காதரன் ஆகிய இருவரும் கார் பிசினஸ் செய்து வந்தனர். வியாபாரத்தில் ஏற்பட்ட பண தகராறு மற்றும் சில காரணங்களால் இருவரும் பிரிந்துவிட்டனர். ஆனாலும் வேணுகோபால் கங்காதரன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், ஒரு நண்பர் மூலமாக கங்காதரனை அவர் மனைவியோடு சந்திக்க வேணுகோபால் ஏற்பாடு செய்தார்.
அந்த நால்வரும் காரில் சென்று கொண்டிருந்த போது, ஒரு இடத்தில் காரை விட்டு இறங்கிய வேணுகோபால் காரின் மீது விஸ்கியை ஊற்றி பற்றவைத்தார். இதில் காரில் இருந்த மூவரும் படுகாயம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து வேணுகோபாலை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






0 Comments