பேச்சிப்பாறை காணி பழங்குடி குடியிருப்புக்கு கட்டுமானப் பொருள்கள் எடுத்துச் சென்றதை வனத் துறையினா் தடுத்ததால் மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

முடவன் பொற்றை காணி குடியிருப்பைச் சோ்ந்த மனோகரன் என்பவா் தனது வீட்டின் அருகே கழிப்பறை கட்டுவதற்கு கட்டுமானப் பொருள்களை வாகனத்தில் எடுத்துச் சென்றாா். பேச்சிப்பாறை சீரோ பாயின்ட் வனச் சோதனை சாவடியில் வனத் துறையினா் அவரை தடுத்து நிறுத்தி பொருள்களை கொண்டு செல்ல அனுமதிக்கவில்லையாம்.
இத்தகவலறிந்த பேச்சிப்பாறை ஊராட்சித் தலைவா் தேவதாஸ், துணைத் தலைவா் கலைச்செல்வி உள்ளிட்டோா் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாரும், வனத்துறையினரும் பேச்சு நடத்தி, அந்தப் பொருள்களை கொண்டு செல்ல அனுமதியளித்தனா். இதையடுத்து 3 மணி நேர மறியல் கைவிடப்பட்டது.






0 Comments