கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விபரங்களை கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் நிர்வாக கமிட்டி வெளியிடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் மாவட்ட கல்விக் குழு தலைவராக திட்டுவிளை முஸ்லிம் ஜமாஅத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி குமரி மாவட்ட துணை பொது செயலாளர் அன்பு சகோதரர் ஏ.சிக்கந்தர் ஹாஜா மைதீன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாவட்ட கல்வி குழு செயலாளராக களியக்காவிளை முஸ்லிம் ஜமாஅத்தை சார்ந்த அன்பு சகோதரர் ஐ.முஜீப் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாவட்ட கல்விக்குழு பொருளாளராக மிடாலம் முஸ்லிம் ஜமாஅத்தை சார்ந்த சோசியல் ஆடிட்டர் V.ஷாகுல் ஹமீது அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்ட கல்வி குழு துணைத்தலைவராக கோட்டார் இளங்கடை முஸ்லிம் ஜமாஅத்தை சார்ந்த சகோதரர் ஏ. ஏ. முஹம்மது இப்ராஹிம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் மாவட்ட கல்வி குழு துணை தலைவராக சுவாமியார்மடம் முஸ்லிம் ஜமாஅத்தை சார்ந்த சகோதரர் எம்.காஜா கமாலுத்தீன் ஆசிரியர் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து நிர்வாகிகளும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கல்வி குழு 8 நிர்வாகிகள் உள்பட மாவட்ட கல்வி குழுவின் மாவட்டம் முழுவதும் உள்ள 13 நிர்வாகிகள் வருகின்ற 28 .8 .2020 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட சான்றிதழும். அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று கன்யாகுமரி மாவட்டம் முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் நிர்வாக கமிட்டி செய்தி வெளியிட்டது






0 Comments