கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் பொது செயலாளர் ஜனாப் P.ஹிமாம் பாதுஷா அவர்கள் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என் தளவாய் சுந்தரம் அவர்களுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி வைத்தார்.
அந்த மனுவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் வியாபாரிகள் கடன் பெற்று தொழில் புரிந்து வந்தனர், தொழில் சம்பந்தமாகவும் பொதுமக்கள் வாகனம் சம்பந்தமாகவும் கடன் பெற்றுள்ள தொகைக்கான மாதாந்திரத் தவணை தொகையை செலுத்துவதில் அரசு ஏற்கனவே ஆறுமாதங்களுக்கு கால அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது கொரோனோ தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் போக்குவரத்து தடை, ஆள் நடமாட்டம் குறைவு, இது போன்ற இன்னும் பல காரணங்களால், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் இருந்து வருகின்றனர்.
எனவே தவணைத் தொகை கட்டும் காலத்தை வருகின்ற டிசம்பர் மாதம் வரையிலும் கால நீட்டிப்பு செய்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படும் வண்ணம் உத்தரவு பிறப்பிக்கவும், அத்துடன் மாநகராட்சி நகராட்சி மற்றும் உள்ளாட்சி சம்பந்தப்பட்ட வணிக வளாகங்களில் குத்தகைக்கு கடைகளை எடுத்து நடத்தி வரும் வியாபாரிகளுக்கு கொரோனோ தாக்கம் முடியும் வரையிலும் மாதாந்திர வாடகையை தள்ளுபடி செய்து நொந்து கிடக்கும் வியாபாரிகளின் வாழ்வில் ஒளியூட்டி நிம்மதி அளிக்கும் படியான வழிவகை நடவடிக்கை எடுக்குமாறும் மாண்புமிகு தமிழக அரசை வேண்டி கேட்டு கொள்வதென கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை மாண்புமிகு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி அவர்கள், மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு மனு அளிக்கப்பட்டது.






0 Comments