கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் சாரல் மழையால் நீர் நிலைகளில் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் குளிர்ச்சியான காற்று வீசுகிறது. மழை பெய்து வரும் நிலையில் சூறைக் காற்று வீசி வருவதால் ரோட்டோரங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து போக்குவரத்து தடை ஏற்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள குளங்கள் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குமரி மாவட்டத்தின் சுற்றுலா தலமான திற்பரப்பு அருவி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இருப்பினும் குளிக்க தடை நீடிக்கிறது, மற்றும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அது போல் மாம்பழத்துறையாறு அணை பகுதியிலும் தண்ணீர் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் தீடீர் மழையால் மனவேதனையில் இருந்தாலும் மற்றொரு பக்கம் விவசாயிகள் மனம் குளிர்ச்சியாகவும் உள்ளது குறிப்பிடதக்கது.