குமரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை மிக எளிமையாக வீட்டுக்கு வீடு கொண்டாடப்பட்டது. முஸ்லிம்கள் வீட்டிலிருந்தவாறே தொழுகை மேற்கொண்டனர்
ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு தங்கள் வீடுகளிலேயே குடும்பத்தினரோடு தொழுகையில் ஈடுபட்டனர். இறைவனின் கட்டளையை ஏற்று, உயிர்ப்பலி கொடுக்க துணிந்த மற்றும் இறைவனின் விருப்பத்துக்கு கீழ்படிந்த, ஒரு சிறந்த தியாகமாக பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகிறது.

கேரளாவில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், அதை பின்பற்றி நேற்று தங்கள் வீடுகளிலேயே குடும்பத்தினருடன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு பண்டிகையை கொண்டாடினர். தங்கள் வீடுகளில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையிலான குடும்ப உறுப்பினர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். குமரியில் வழக்கமாக மசூதிகளில் நூற்றுக்கணக்கானோர் இணைந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது கொரோனா காரணமாக மசூதிகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. வீட்டிலிருந்தவாறே பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் நடைபெறுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் பல முஸ்லீம் அன்பர்கள் கருத்து தெரிவித்தனர்