கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டணம் துறைமுகத்தில், படகு கவிழ்ந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் 10 பேர் உயிர் தப்பினர்.
இந்த துறைமுகத்தில், மணல் திட்டுகள் உருவாகி அடிக்கடி படகுகள் விபத்தில் சிக்கி வருவதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 13 நாட்களில் விபத்துக்களில் சிக்கி 3 மீனவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, துறைமுகத்தை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தை நேற்று தொடங்கினர். இந்நிலையில், கடலில் மீன் பிடித்து விட்டு திரும்பிய இரண்டு படகுகள் பொழிமுக துறைமுக தடுப்பு சுவர் மற்றும் மணல் மேடுகளில் சிக்கி விபத்துக்குள்ளாகின. இந்த இரண்டு படகுகளிலும் இருந்த 10-மீனவர்களும் கடல் அலையில் சிக்கி தவித்து பின்னர், நீந்தி கரையேறினர்.