குமரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானதை தொடர்ந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்தது.

குமரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு புதியதாக 182 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த இரண்டு நாட்களில் 310 பேர் பாதிக்கபப்ட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
குழந்தைகள், சிறுவர்கள், சிறுமியர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மொத்த பாதிப்பு 7,359 ஆக இருந்தது. இவர்களில் 5,759 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனை மற்றும் கோவிட் மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 1,495 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று அருமனையை சேர்ந்த 80 வயது மூதாட்டி, வடசேரியை சேர்ந்த 61 வயது பெண், கூட்டப்புளி பகுதியை சேர்ந்த 74 வயது ஆண் உட்பட 3 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே மாவட்டம் முழுவதும் உயிரிழந்தவர்களில் அதிகம் பேர் வயதானவர்கள். ஏற்கனவே நாள்பட்ட நோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.






0 Comments