கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தனியாா் நிறுவனங்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு கோரிக்கை மனு அளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளித்த மனு விவரம்:-
திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடைகளை மாலை 7 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது போன்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் அனுமதிக்க வேண்டும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து தனியாா் நிறுவனங்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கு மேலும் 4 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும். வீட்டு வரி, கடைகள், வணிக வளாகங்களுக்கான வரி மற்றும் திருமண மண்டபங் களுக்கான வரிகளை ரத்து செய்ய வேண்டும்.

பொது முடக்கம் காரணமாக தனியாா் நிறுவனங்களில் 80 சதவீதம் பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, வேலை இழந்துள்ள தொழிலாளா்களுக்கும் நிவாரண உதவி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.