கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 31 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 31 ம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டு உள்ளது. ஓணம் பண்டிகை உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக அறிவிக்கப்படும் வேலை நாளானது பின்னர் தனியாக அறிவிக்கப்படும். மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், அரசு ஈடுபாடு சம்மந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு 31 ம் தேதி இயங்கும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.