இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உத்தரபிரதேச மாநிலம் உள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அம்மாநில பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக, அங்கு இந்தாண்டு இறுதியில் நடைபெற இருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் சில முக்கிய மாற்றங்கள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, 2 குழந்தைகளுக்கு மேல் பிள்ளை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க மாநில அரசு ஆலோசனை செய்து வருகிறது.

அவ்வாறு தடைவிதிக்கும் பட்சத்தில் அதற்காக அம்மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் செய்யவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பஞ்சாயத்து தேர்தல் நெருங்கி வருவதால் அதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.