தமிழகத்தில் கொரோனா வுக்கு அனைத்து தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களும் இதன் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

மேலும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அதே சமயத்தில், மக்கள் பிரதிநிதிகளில் பலர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.
இதேபோல் கடந்த வாரம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ராஜேஷ்குமார் கொரோனா தொற்றுக்கு ஆளானார். இதையடுத்து அவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கான முடிவு நேற்று வெளியானது. இதில் அவருக்கு கொரோனா தொற்று முற்றிலும் நீங்கியிருந்தது தெரிய வந்தது. இதனால் அவர் வீடு திரும்ப உள்ளார்.






0 Comments